கடனில் சிறு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது: சஜித்
நாடு மீண்டும் முழுமையான கடனைச் செலுத்தும் நிலைக்கு சென்றதன் பின்னரே மக்களால் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 259ஆம் கட்டமாக பாதுக்க பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றுக்கு 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கி வைத்ததன் பின்னர் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தற்போது நாட்டின் மொத்த கடனில் சிறு பகுதி மாத்திரமே மீளச் செலுத்தப்பட்டுள்ளது. முழுமையான கடனை மீளச் செலுத்தினால் மாத்திரமே மக்கள் மகிழ்ச்சியடைய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்