சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

❌வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின்னர் நல்ல தூக்கம் வரும். இன்னும் சிலர் உணவு உட்கொண்ட பின்னர், அந்த உணவு செமிப்பதற்கு ஒருசில செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால், எப்போதுமே வயிறு நிறைய உணவை உட்கொண்ட பின்னர் ஒருசில செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், அது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும். அந்தவகையில் வயிறு நிறைய ஒருவர் உணவை உட்கொண்ட பின்னர் கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

🎈முதலில் நீங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறு முட்டக் குடிக்கக் கூடாது. இதனால் ஜீரண நீர் தீர்ந்து போய் அஜீரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும். அதைப்போல்இ நீங்கள் சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும் அப்போது குடிக்க வேண்டும்.

🎈அடுத்து சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் செயல்பட மிகவும் சிரமப்படும், அதனால் ஜீரணம் முறையாக நடக்காது. நீங்கள் குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும். வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் தூங்குவது என்பது கேடு விளைவிக்கும். எப்படியெனில், உணவை உட்கொண்ட உடனேயே தூங்கி எழுவதனால், உண்ட உணவு செமிக்காமல் அப்படியே வயிற்றில் இருக்கும். இப்படி உணவு செமிக்காமல் அப்படியே இருந்தால், அதனால் வயிறு உப்புசத்தை உணரக்கூடும்.

🎈அதைப்போல், சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். ஆகவே குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.

🎈புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உணவுக்குப் பிறகு புகைபிடிப்பது இன்னும் தீங்கு விளைவிக்கும். ஒரு முழு உணவுக்குப் பிறகு ஒரு சிகரெட் பத்து சிகரெட்டுகளுக்கு சமம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் சாப்பிட்ட உடனேயே சிகரெட் புகைப்பது செரிமானத்தில் குறுக்கிடுகிறது மற்றும் பல்வேறு இரைப்பை குடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் இதில் உள்ள நச்சுகள் நாம் உண்ணும் உணவையும் அழித்து விடுகின்றன.

🎈டீ என்பது பலரின் விருப்பமான பானமாகும். இது ஒரு நல்ல புத்துணர்ச்சி மற்றும் நிதானமான உணர்வைத் தருகிறது. ஆனால் சாப்பிட்ட பிறகு டீ குடிப்பதால் உணவில் புரதம் கிடைக்காது. தேநீரில் அமிலங்கள் உள்ளன. அவை உணவு புரதங்களை உறிஞ்சுவதில் தலையிடுகின்றன. ஆகவே உணவு உட்கொண்ட பின்னர் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

🎈உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் பழங்களில் உள்ளன. ஆனால்இ உணவுக்குப் பிறகு இவற்றைச் சாப்பிடுவது நல்லதல்ல. பழங்கள் மற்ற உணவுகளை விட வித்தியாசமாகவும் வேகமாகவும் செரிக்கப்படுகின்றன. உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு அவை செரிமானத்திற்கு கடினமாகின்றன. இதன் விளைவாக, உடல் பருமன், வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் எழுகின்றன. எனவே முடிந்தவரை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அல்லது உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்