கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்றைய தினம் புதன் கிழமை சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக கொழும்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய தினம் முன்னெடுக்கவுள்ள சுகவீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்