
பறவைக் கூண்டிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள்
கொழும்பில் பறவைக் கூண்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை – ஹூனுபிட்டிய, பகுதியை சேர்ந்த 46 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கராஜ மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் பின்னால் உள்ள பறவைக் கூண்டில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பபெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 75 இலட்சம் ரூபா பெறுமதியான 442 கிராம் 225 மில்லிகிராம் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 07 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவினை பெற்று, இந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் சூத்திரதாரியை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
