
உழவு இயந்திரம் விபத்து: சாரதி படுகாயம்
நுவரெலியா பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை உழவு இயந்திரம் பள்ளத்திற்குள் விழுந்ததில் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
நுவரெலியா பகுதியிலிருந்து குப்பைகள் ஏற்றிகொண்டு வெளிமடை பகுதியை நோக்கி பயணித்த உழவு இயந்திரமே கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரேந்தபொல பகுதியில் நூறு அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரேந்தபொல பகுதியில் பெய்து வரும் அதிக மழைக் காரணமாக வீதியை விட்டு விலகி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கெப்பட்டிபொல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
