பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: இருவர் பலி

மாத்தளையில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

வத்தேகம பகுதியை சேர்ந்த 54 வயதுடைய தாயும், 17 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தேகமவில் இருந்து அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மகனும், தந்தையும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்