உலகிலேயே மிகவும் சிக்கலான மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த வீடு
உலகிலேயே மிகவும் சிக்கலான மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த வீடு ஒன்று நெதர்லாந்து-பெல்ஜியம் எல்லையின் டச்சுப் பக்கத்தில் உள்ள பார்லேவில் அமைந்துள்ளது.
அப்படி என்ன சிக்கல் இருக்க முடியும் அல்லது சுவாரஸ்யம் இருக்க முடியும் இங்கு என்று பார்த்தால், இரண்டு நாடுகளில் எந்த நாட்டின் குடியுரிமையை தாங்கள் பெறவேண்டும் என்று முடிவு எடுக்க கூடிய அளவிற்கு அந்த வீட்டில் இருக்கும் நபர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாம்.
பார்லேவில் அமைந்துள்ள குறித்த வீடானது நெதர்லாந்து-பெல்ஜியம் எல்லையில் அமைந்துள்ளது. எல்லையால் பிரிக்கப்பட்ட வீட்டின் இடது பக்கம் பெல்ஜியம் நாட்டிலும் வலது பக்கம் நெதர்லாந்து நாட்டிலும் உள்ளதாம்.
மேலும் 90 வயதான பெண்மணி ஒருவர் வீட்டின் பெல்ஜியம் பக்கத்தில் வசித்து வருகின்றாராம், அவரின் மகன் நெதர்லாந்து நாட்டின் எல்லை அமைந்திருக்கும் வீட்டின் அறையில் வசிக்கிறாராம்.
குறித்த வீட்டிற்கு பெல்ஜியம் நாட்டில் தனியான வீட்டு இலக்கமும் நெதர்லாந்து நாட்டில் தனியான வீட்டு இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் இன்னும் சிறப்பான விடயமாக குறித்த வீட்டில் பிறக்கும் குழந்தைகள் எந்த நாட்டின் குடியுரிமையை பெற வேண்டும் என்று அவர்கள் தானாம் முடிவு எடுப்பார்களாம். இரு நாட்டின் சட்டங்களும் இந்த வீட்டிற்கு பொருந்தும் என்றும் கூறப்படுகின்றது.
இவர்கள் எந்த நாட்டிற்கு வரி செலுத்த வேண்டும் என்பதும் அவர்களுடைய விருப்பம் தான் என்றும் இரு நாட்டின் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.
உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புவியியல் விந்தையானது குறித்த வீடு 1198 ஆம் ஆண்டில், பிரபாண்டின் டியூக் ஹென்றி I, தனது நிலத்தின் சில பகுதிகளை ப்ரெடாவின் பிரபுவான ஸ்கோடனின் காட்ஃபிரைடிடம் ஒப்படைத்தபோது இப்பகுதி முதன்முதலில் உறுவாக்கப்பட்டுள்ளது.
1830 ஆம் ஆண்டில் பெல்ஜியம் நெதர்லாந்தில் இருந்து சுதந்திரமடைந்தபோது எல்லைப் பிரச்சினை முன்னுக்கு வந்தது, மேலும் பிரச்சினை இறுதியாக 1995 இல் தீர்க்கப்பட்டு தற்போது இரு நாடுகளின் சலுகைகளுடன் இந்த வீடு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்