ஹஜ் யாத்திரையின்போது குறைந்தபட்சம் 550 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழப்பு
இவ்வருடம் ஹஜ் யாத்திரையின்போது குறைந்தபட்சம் 550 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் எகிப்தியர்களே அதிகம் எனவும் குறைந்தபட்சம் 323 எகிப்திய யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளனர் என அரேபிய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர் என சர்வதேச செய்தி நிறுவனமாக AFP செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
மேற்படி எகிப்தியர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் சனநெரிசலில் சிக்கி காயமடைந்து உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
புனித மக்கா நகருக்கு அருகிலுள்ள அல் முவைசெம் நகரின் வைத்தியசாலை பிரேத அறையிலிருந்து இப்புள்ளிவிபரங்கள் கிடைத்ததாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்
இதேவேளை, உயிரிழந்த ஜோர்தானிய ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது.
41 ஜோர்தானியர்கள் இறந்துள்ளனர் என செவ்வாய்க்கிழமை ஜோர்தானிய அரசாங்கம் தெரிவித்திருந்தது.
பல்வேறு நாடுகளிலிருந்து கிடைத்த தரவுகளின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 577ஆக அதிகரித்துள்ளது என AFP தெரிவித்துள்ளது.
அதேவேளை அல்- முவைய்செம் வைத்தியசாலை பிரேத அறைக்கு புள்ளிவிபரங்களின்படி 550 பேர் உயிரிழந்துள்ளனர் என இராஜந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான், இந்தோனேஷியா, செனகல் நாட்டவர்களும் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்