20இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் மீட்பு: ஒருவர் கைது

-வவுனியா நிருபர்-

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட மரங்கள் 20 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானது என மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்ற இதேவேளை மீட்கப்பட்ட மரங்களையும் சந்தேக நபரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்