வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

 

-சம்மாந்துறை நிருபர்-

சம்மாந்துறை பிரதேசத்தில் வரவேற்புக் கோபுரம் அமைப்பதற்கு நீதிமன்றினால் வழங்கப்பட்ட  இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நௌபர் என்பவரால் மன்றிக்கு வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பான விசாரணையை இன்று புதன்கிழமை   மேற்கொண்ட போது அவ்வாறு  நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேசத்தில் வரவேற்புக் கோபுரம் அமைப்பதற்கு எதிராக இரண்டு நபர்களினால் முறைப்பாடு ஒன்று கடந்த 14 ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து,  குறித்த கோபுரம் அமைப்பதற்கு தொடர்பாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன், வீரமுனை கோவில் தலைவர் ராஐ கோபால், கிராம உத்தியோகத்தர் பிரதீபன் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்