அராலி பேச்சியம்மாள் ஆலய மகோற்சவம் ஆரம்பம்

-யாழ் நிருபர்-

அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, நீளத்திகாடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவமானது நேற்றையதினம் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.

அந்தவகையில் நேற்று மதியம் அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அன்னதான நிகழ்வு நடைபெபெற்றது.

பின்னர் மாலை அலங்கார உற்சவம் நடைபெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர், வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.

பின்னர் அம்பிகை சிங்கவாகனத்தில் ஏறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பூஜை வழிபாடுகளை துஷ்யந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்து அம்பாளை தரிசித்த பக்தர்கள் இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்