
இலங்கை அணியின் வீரர்கள் சரியாக விளையாடவில்லை – வனிந்து ஹசரங்க
இலங்கை அணியின் வீரர்கள் சரியாக விளையாடாததால் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக நேரிட்டதாக இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்தார்.
ஐசிசி இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி இன்று புதன்கிழமை காலை நாட்டை வந்தடைந்தது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
‘இலங்கை அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை, இதனால் போட்டிகளில் இருந்து விலக நேரிட்டது.
அணித்தலைவர் மற்றும் வீரர் என்ற ரீதியில் இதற்காக நான் வருந்துகிறேன், நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் சிறப்பாக விளையாடவில்லைஇ
துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாகச் செயற்படவில்லை’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
