
உலகில் மழையே பெய்யாத கிராமம் எங்குள்ளது தெரியுமா
யேமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹுதீப் என்ற கிராமத்தில் மழையே பெய்யாது என்று கூறப்படுகின்றது.
இந்தக் கிராமம் தரை மட்டத்திலிருந்து 3200 மீற்றர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது. இங்கு மழையே பெய்யாததால், மிகவும் வறட்சி நிறைந்த கிராமமாக இது உள்ளது.
இந்த கிராமத்தில், மழை பெய்யாததால், வானிலை மிகவும் வறண்டு காணப்படுதோடு இரவில், கிராமத்தில் உறைபனி குளிரும் மீண்டும் காலை சூரியன் உதிக்கும்போது வானிலை வெப்பமடைகிறது.
யேமனின் இந்தப் பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும் மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளதால் தான் இங்கு மழை பெய்வதில்லை எனக் கூறப்படுகின்றது.
அல் ஹுதைப் கிராமம் சமவெளியில் இருந்து 3200 மீற்றர் உயரத்தில் உள்ளதால் சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000 மீற்றருக்குள் குவியும்.
எனவே அல்-ஹுதைபின் மீது மேகங்கள் குவிவதில்லை. இதனால் மழை பெய்ய வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
