
அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் மகிந்த
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் உடல்நிலை மற்றும் நாடு முழுவதும் பயணம் செய்யும் போது அரசியலில் ஈடுபடுவதில் உள்ள சிரமம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
