தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க தயாராகும் தாய்லாந்து

தென்கிழக்கு ஆசியாவின் முதல் நாடாக தாய்லாந்து நாட்டின் செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா இன்று புதன் கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு 130 பேர் ஆதரவாக வாக்களித்ததோடு சிலர் வாக்களிக்காமல் வெளியேறியுள்ளனர். மேலும் 4 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேறியது.

இதனை தொடர்ந்து இன்றையதினம் புதன் கிழமை செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக்கப்படும்.

இதன் மூலம் ஒரு ஆண் மற்றொரு ஆணையும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடியும்.

இந்த மசோதா செனட் குழு ஆய்வு செய்த பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் மன்னரிடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் சட்டமாக்கப்படும்

இதன் மூலம் தாய்லாந்து தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர், தைவான் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்