மட்டு கொக்கட்டிசோலையில் வாகன விபத்து

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் இன்று புதன் கிழமை 12 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான நகர் பகுதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கிளைக்கு அருகாமையிலேயே சற்று முன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை பிரதான சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் உயர் ரக மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளதுடன் விபத்தில் வாகனங்களில் பயணித்தோருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்