
தொல்பொருள் திணைக்களத்தால் நிறுத்தப்பட்ட மைதானத்தை பார்வையிட்ட இம்ரான் மஹ்ரூப்
-கிண்ணியா நிருபர்-
தொல்பொருள் தினைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை மக்கேசேர் விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக திருகோணமலை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தர விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

