வவுனியாவில் நிலஅதிர்வு

-வவுனியா நிருபர்-

வவுனியாவின் பல்வேறு இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பெரியளவில் அதிர்வுகளை உருவாக்காத மெல்லிய அதிர்வாகவே இதைக் கருத வேண்டியுள்ளதாக சர்வதேச நில அதிர்வுகளை ஆராய்ந்து பதிவிடும் மையமான Volcana Discovery தெரிவிக்கிறது.

மேலும் இலங்கை நேரம் இரவு 11.02 மணியளவில் குறித்த நில அதிர்வு இடம்பெற்றுள்ளதாகவும் வவுனியா மாவட்டத்தின் வடமேற்கு பகுதியின் 5 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் அதிர்வுகளை அதிகமாக உணரப்பட்டுள்ளதாக volcana discovery தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்