ஐசிசி இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புதிய சாதனை

ஐசிசி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் முதல் 6 ஓவர்களில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணி படைத்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த சாதனையை தன்வசப்படுத்தியது.

இதன்படி குறித்த போட்டியின் முதல் 6 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 92 ஓட்டங்களைக் குவித்தது.

முன்னதாக 2014 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 91 ஓட்டங்களைக் குவித்ததே சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி முறியடித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்