வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தை
நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வூட் டங்கள் வனப்பகுதியில் இருந்து இன்று செவ்வாய் கிழமை 4 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
லக்ஸபான பகுதியில் இருந்து டங்கள் தோட்டப்பகுதிக்கு திருமணம் வைபவத்திற்கு குறித்த ஆண் குழந்தையை அவருடைய பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர்.
குறித்த குழந்தை விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென குழந்தை காணாமல் போனதை தொடர்ந்து நேற்று திங்கட் கிழமை மாலை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஓன்றினை பதிவு செய்தனர்.
முறைபாட்டுக்கு அமைய பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவில் காணொளியின் உதவியோடு குழந்தை மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குழந்தை கானாமல் போன சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
