சுண்டைக்காய் பயன்கள்
🔺🔺சுண்டைக்காய் மருத்துவ பயன்கள் வாய்ந்த காய்கறிகளில் ஒன்று. இருப்பினும் இவற்றின் கசப்பு தன்மையின் காரணமாக பலரும் இதை விரும்புவது இல்லை. பெரும்பாலும் கிராம புறங்களில் நோய் தீர்க்கும் காய்கறி வகைகளில் சுண்டைக்காய் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த சுண்டைக்காயில் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் என்னும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தவகையில் சுண்டைக்காய் பயன்களைப் பார்ப்போம்.
🍀காய்ச்சல் உள்ளபோது அதிகளவு சுண்டைக்காய் சாப்பிட்டு வர, உடலில் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும், இதனால் காய்ச்சல் விரைவில் குணமாகும்.
🍀நரம்பு மண்டலத்திற்கு சக்தி கொடுக்கவும் பார்வை திறனை அதிகரிக்கவும் சுண்டைக்காய் உதவுகிறது.
🍀சுண்டைக்காயில் இருக்கும் இரும்புச்சத்து, ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
🍀 சுண்டைக்காய் என்பது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் ஜீரண சக்தியை தூண்டவும் உடலின் நச்சுக்களை வெளியேற்றவும் இது பயன்படுகிறது.
🍀சுண்டைக்காயின் மிகப்பெரிய மருத்துவ குணங்கள் எது என்று சொன்னால், வயிற்று பூச்சிகளை வெளியேற்றுவது. எனவே வயிற்று பூச்சிகளை அழிக்க தினமும் அதிகளவு சுண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இவ்வாறு சுண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதினால் வயிற்று பூச்சிகள் வெளியேறும், மேலும் வயிற்று சம்மந்தமான நோய்கள் வராமலும் காக்கும்.
🍀சில சமயங்களில் உடலில் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அந்த சமயத்தில் அதிகளவு சுண்டைக்காய் சாப்பிட்டு வர அலர்ஜி மற்றும் அரிப்புகளினால் ஏற்பட்ட காயங்கள் உடனே சரியாகும்.
🍀சுண்டைக்காயை அதிகளவு உணவுல சேர்த்துக்கொள்வதன் மூலம் வாயு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.
🍀சுண்டைக்காய் கசப்பு தன்மையுடையது என்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள், இருப்பினும் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து, சுண்டைக்காயை சாப்பிட பழகவேண்டும். ஏன்னென்றால் சுண்டைக்காயில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகள் இன்றி ஆரோக்கியமாக வளருவார்கள்.
🍀காய்ந்த சுண்டைக்காயை நெயில் வறுத்து, வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வர மூலம், மூலச்சூடு, மூலத்தினால் ஏற்பட வயிற்று கடுப்பு போன்ற பிரச்சனைகள் விரைவில் சரியாகும். மேலும் மூலத்தினால் ஏற்படும் இரத்த கசிவு பிரச்சனைகளும் உடனே சரியாகும்.
🍀சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
சுண்டைக்காய் பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்