சர்வதேச பீதி தினம் (International Panic Day) – ஜூன் 18

நம்மில் சிலர் இருப்பார்கள் எதற்கெடுத்தாலும் பயம் அவர்களுக்கு,  இவ்வாறான பதற்றம் பயத்தோடு வாழ்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இந்த மன அழுத்தம் மனிதர்களுக்கு பல நோய்களை ஏற்படுத்தும்.

மனிதர்கள் அச்சமின்றியும் மன அழுத்தம் இன்றியும் வாழ வேண்டும் என்பதற்காகவே சர்வதேச பீதி தினம் International Panic Day ஜூன் 18ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.

பீதி Panic என்ற சொல் கிரேக்க நாட்டின் மேய்ப்பன் என்ற கடவுளிடம் இருந்து பெறப்பட்டது. அவர்தான் காட்டில் பயணிப்பவர்களுக்கு ஒருவித சத்தத்தின் மூலம் அச்சத்தை ஏற்படுத்துவார். மனிதர்கள் பயப்படுவதைப் பார்த்து சந்தோஷமடைவார் என்றும் கிரேக்கர்களிடையே நம்பப்படுகிறது.

எதுவாக இருந்தாலும் பயம் என்ற உணர்வை நம்மை ஆள விடுவது நம் வாழ்க்கையை ஆபத்தில் கொண்டு போய் விடும்.

எதை பார்த்தாலும் பீதியடையும் பழக்கத்தை விடுத்து அதை எதிர்த்து “என்ன தான் ஆகிவிட போகிறது ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்” என்று தைரியமாக முன்னோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.

பீதியடையும் மனநிலையானது நம் மனதையும் உடலையும் நோய்வாய்ப்பட செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்