தமிழ்ப் பொது வேட்பாளரை தனி ஒரு கட்சி தீர்மானிக்க முடியாது: வியாழேந்திரன்

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் தனி ஒரு கட்சியினால் தீர்மானிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரையம்பதி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் கொண்ட கட்டடத்தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்