துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயம்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள நீர் பூங்கா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு அடையாளம் தெரியாத நபரொருவரினால் நடத்தப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணங்கள் இதுவரையில் வெளியாக நிலையில் மிச்சிகன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்