பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவிகள்

-மூதூர் நிருபர்-

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளு தூக்கும் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி பிலிமந்தலாவ மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய தி/சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அந்தவகையில் சி.ஹரினி 16 வயதின்கீழ் பங்குபற்றி (73 கிலோகிராம்) முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், எஸ்.கிஷோத்திகா 18 வயதின்கீழ பங்குபற்றி (93 கிலோகிராம்) இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், வி.பிரஷா 18 வயதின்கீழ் பங்குபற்றி (107 கிலோகிராம்) மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்களை கே.உமாசுதன் ஆசிரியர் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்