2 கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள்: 3 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை நேற்று ஞாயிற்று கிழமை கைப்பற்றியதுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 10 பிரதேசங்களைச் சேர்ந்த 32 – 45 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 10 பகுதியில் வைத்து கைது செய்யபட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 120,000 சிகரெட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட இந்த சிகரெட்டுகள், நாடு முழுவதும் விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைக்காக கடலோர பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்