வேலையில்லாத பட்டதாரிகளால் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகளால் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஹட்டன் நகரில் இருந்து மல்லியப்பூ சந்தி வரையில் பேரணி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேநேரம் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் தங்களுக்கான தொழில் வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வேலையில்லாத பட்டதாரிகள் 1,250ற்கும் மேற்பட்டோர் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்