
காரைதீவில் கடலில் மூழ்கி இளம் வைத்தியர் உயிரிழப்பு
காரைதீவைச் சேர்ந்த இளம் வைத்தியர் ஒருவர் கடலில் மூழ்கி இன்று சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழந்தவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றி வந்த இலங்கநாதன் தக்சிதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உகந்தைமலை முருகன் ஆலயத்துக்கு சென்று வரும் வழியில் பாணமைக் கடலில் குளிக்க சென்ற நிலையில் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக, ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் விசாரணைகளின் பின்னரே உறுதியான தகவல்கள் தெரியவரும்.
உயிரிழந்தவரின் சடலம் பாணம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த வைத்தியர் முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன் ஆசிரியரின் மூத்த மகன் எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை காரைதீவைச் சேர்ந்த அட்சயன் என்ற மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இவரின் இறுதிக்கிரியைகள் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சோக சம்பவத்தை இடம்பெற்று இரண்டாவது நாளில் இன்னொரு வைத்தியரின் மறைவு காரைதீவு மண்ணுக்கு பெரும் இழப்பாக உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
