கிழக்கு ஆளுனரால் பல்தேவை நிலையம் திறந்து வைப்பு

கிண்ணியா நகர சபையின் செயலாளர் தலைமையில்,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் பெரியாற்றுமுனையில் அமைந்துள்ள பல்தேவை கட்டிடம்  இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .
இதில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான சட்டத்தரணி  ஹில்மி மகரூப், எஸ்.எச்.எம். நளீம், முன்னாள் உறுப்பினர்களான எம்.எம். மஹ்தி, எம்.ஏ. கலிபத்துள்ளா, எம்.எச்.எம். ராபி ஆகியோரும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி, உலமா சபை தலைவர், சனசமூக அபிவிருத்தி அங்கத்தவர்கள், பெண்கள் அமைப்புக்கள், மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்