
மட்டு காத்தான்குடியில் துப்பாக்கி சூடு
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பகல் 1 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடியை சேர்ந்த ஷகீட் என்பவரே தாக்குதலை மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் சீ.சீ.டி.வி கமெராவில் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
குறித்த நபர் வீடு ஒன்றினுள் புகுந்து அங்கு இருந்த பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு 20 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளமை முதல்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த ஷகீட் முன்னர் மத அடிப்படைவாத தீவிரவாதக் குழு ஒன்றில் அங்கம்வகித்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


