முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி முட்டை ஒன்றின் விலை 55 – 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், சீரற்றகாலநிலை காரணமாகவே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தைக்கு அதிகளவிலான முட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதால் முட்டையின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்