
இதய நோய்காக சிகிச்சை பெற்று வந்த நபர்: கிரிகெட் விளையாடும் போது மரணம்
இந்தியாவில் புதுச்சேரி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்
முல்லை நகரைச் சேர்ந்த கிஷோர் ( வயது 25 ) என்பரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் இதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது பந்தை பிடிக்க வேகமாக ஓடியதால் மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இயைஞனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
