வறிய குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்-

அரசாங்கத்தினால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசிப் பொதிகள் வழங்கும் வேலை திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருகோணமலை – தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட தோப்பூர் கிராம உத்தியோகத்தை பிரிவை சேர்ந்த 212 பயனாளர்களுக்கும், அல்லைநகர் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 399 பயனாளர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி பொதிகள் கிராம உத்தியோகத்த காரியாலயத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்