
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்
மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இன்று 10.45 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
சம்பள முரண்பாடு, எம்.சி.ஏ கொடுப்பனவு அதிகரித்து வழங்குதல் போன்ற பல நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட போராட்டமானது யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேரணியாக வந்து பிரதான வாயிலில் கவனயீர்ப்பு போராட்டமாக இடம்பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
