உளநலம் தொடர்பான செயலமர்வு

தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநலம் தொடர்பான செயலமர்வொன்று இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வில் உளநலம் உள்ளிட்ட உளநெருக்கடி இதனை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் போன்றன தெளிவூட்டப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு வளவாளராக கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவின் வைத்தியர் ஏ.கே.எம்.நஸ்மி கலந்து கொண்டார்.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் டீ.ரு.டீ.டு.உடகெதர உட்பட சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்