
மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி பலி
அம்பாறை மாவட்டம் காரைதீவிவு பகுதியில் மருத்துவ துறை மாணவன் இன்று வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றி மருத்துவ துறைக்கு தெரிவான காரைதீவை சேந்த எஸ்.அக்சயன் (வயது – 20) என்ற மாணவனே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று இன்று வெள்ளிக்கிழமை காலை திரும்பி வரும் பொழுது நீலகிரி ஆற்றில் நீராடுவதற்காக நீரில் குதித்துள்ளார். இதன் போது நீரினுள் இருந்த பாறையில் தலை மோதிய நிலையில் மயக்கம் அடைந்து நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.
தற்போது சடலம் லாகுலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
