மட்டக்களப்பில் கலாநிதி வ.குணபாலசிங்கம் எழுதிய நூல் வெளியீட்டு நிகழ்வு

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை கலாநிதி வ.குணபாலசிங்கம் எழுதிய “கிழக்கிலங்கையில் முருக வழிபாடு வரலாறும் வழமைகளும்” நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கை நிறுவகம் கிழக்கு பல்கலைகழகத்தில் இன்று காலை 10 மணியளவில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் நூல் அறிமுகவுரையினை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந.சுபராஜ் வழங்கி வைத்தார்.

இதன்போது பிரதம விருந்தினராக பேராசிரியர் வ.கனகசிங்கம் (உபவேந்தர் கிழக்கு பல்கலைக்கழகம்), கௌரவ அதிதிகளாக பேராசிரியர் எப்.சி.றாஹல் (மேனாள் உபவேந்தர் கிழக்கு பல்கலைக்கழகம்), பேராசிரியர் வே. குணரத்தினம் ( சமூக விஞ்ஞானங்கள் துறை கிழக்கு பல்கலைக்கழகம்), பேராசிரியர் க.இராஜேந்திரம் (புவியியல் துறை கிழக்கு பல்கலைக்கழகம்), பேராசிரியர் திருமதி. சாந்தி கேசவன் (இந்துநாகரிகத் துறை கிழக்கு பல்கலைக்கழகம்), கலாநிதி க.இரகுபரன் (மொழித்துறை தென் பல்கலைக்கழகம்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்