பெரிய ஊறணி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு பெரிய ஊறணி பேரருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய புனருத்தாரண எண்கழிம தாபன ஒன்பது திருக்குண்ட மனுசூத்திர பெரும்யாக பெரும்குடமுழுக்குப் பெருவிழா 19.06.2024 புதன் கிழமை காலை 9 மணிமுதல் 10.20 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் இடம்பெறவுள்ளது.

அம்பாளின் கிரியைகள் 13.06.2024 வியாழக்கிழமை அன்று ஆரம்பமாகி 18.06.2024 செவ்வாய் கிழமை எண்ணெய்க்காப்பு இடம்பெற்று 19.06.2024 புதன் கிழமை அன்று திருக்குடமுழுக்கு இடம்பெற்று 01.07.2024 திங்கட்கிழமை அன்று பாற்குடபவணியும், சங்காபிஷேகமும், பாலாபிஷேக பெருவிழாவும் நடைபெறவுள்ளது.

இதேவேளை அம்பாளின் பெரும்குடமுழுக்கு பெருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் 19.06.2024 புதன் கிழமை அதிகாலை முதல் உலகப்புகழ் பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி ஈழநல்லூர் பி.எஸ்.பாலமுருகன் சகோதரர்கள் சங்கமிக்கும் நாதார்ப்பணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்