
தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 8 வயது பேத்தி உயிரிழப்பு
-மன்னார் நிருபர்-
தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி பேத்தி உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார்.
இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய பேத்தி திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
