
வாகன விபத்து: 05 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் சேலம் சுக்கம்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி 05 பேர் உயிரிழக்கக் காரணமான தனியார் பேரூந்து சாரதியை ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக கைது செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் பேரூந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், விபத்து ஏற்பட சாரதியின் அதிவேகம் தவிர்த்து வேகத்தடையும் ஒரு காரணம் என ஆய்வு செய்தனர்.
மேலும் விபத்து இனி நடக்காமல் இருக்க சாலையை அகலப்படுத்த வேண்டுமா? அல்லது வேறு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
