
கொழும்பில் போக்குவரத்து கட்டுப்பாடு
கொழும்பு கொஹவல சந்தியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், நாளை சனிக்கிழமை முதல் அவ்வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொஹவல பாலத்தை நோக்கிப் பயணிக்கும் கனரக வாகனங்கள் அப்பகுதியுனூடாக பயணிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிர்மாணப் பணிகள் 2 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதால், அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்றுவழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
