கணவருக்காக ஒரு மாதத்திற்கு தேவையான உணவை ஒரே நாளில் சமைத்த கர்ப்பிணி பெண்

ஜப்பான் நாட்டில் கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவை ஒரே நாளில் கர்ப்பிணி பெண் ஒருவர் சமைத்துள்ள சம்பவம் ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணி பெண் தான் பிரசவத்திற்கு சென்றுவிட்டால், கணவர் வெளியில் சரியாக சாப்பிடமாட்டார் எனக் கூறி 30 நாட்களுக்கு தேவையான உணவை சமைத்துள்ளார்.

பிரசவத்திற்கு செல்வதற்கு முன்பு, தனது கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவை தயாரித்து, குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து அதனை காணொளியாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பலர் பலவிதமான விமர்சித்துள்ளனர். மேலும், கர்ப்பிணி இவ்வாறு வேலை செய்யலாமா? என விமர்சித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்