கட்டுப்பாட்டை இழந்த கார்: 12 பேர் படுகாயம்

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் பீண்ட் அருகே இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அதிவேகமாக வந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நடந்து சென்ற மக்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 08 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்திய கார் சாரதியின் மீது பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்