
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
மாத்தளையில் இருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிய கனரக வாகனம் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதுடன் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லும் ஒரு பாதை தடைப்பட்டுள்ளதாகவும், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் மற்றைய பாதையைப் பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
