
135 கிலோ கேரள கஞ்சா மீட்பு: சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சா இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக வெற்றிலைக்கேணி கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடி படையினர் இணைந்து தாளையடி பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ளனர்.
இதன்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் 135 கிலோ எடையுள்ள 3 கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றிய வெற்றிலைக்கேணி கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த கஞ்சா பொதிகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
