
தாமரை பறிக்க சென்ற சிறுவன் சடலமாக மீட்பு
தாமரை பூ பறிக்க சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது .
அத்திமலை மகா வித்தியாலயத்தில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் கொவிப்பொல வீதியை சேர்ந்த மதிஷ தேனுவன் (வயது – 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் பாடசாலை முடிந்து, தனது நண்பர்கள் மூவருடன் தாமரை பறிப்பதற்காக குறித்த ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது வறட்சி காலத்தில் தண்ணீர் எடுப்பதற்காக ஏரியின் நடுவே வெட்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார் .
சிறுவனுடன் வந்த நண்பர்கள் இச் சம்பவம் தொடர்பில் எவருக்கும் தெரிவிக்காத நிலையில், மாலை 5.45 மணி வரையிலும் சிறுவன் வீட்டிற்கு வராததால் சிறுவனின் தந்தை சிறுவனை தேடியுள்ளார் . அப்போது குழந்தை ஏரியை நோக்கி சென்றதை கண்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததையடுத்து அங்கு சென்று பார்த்த போது, சிறுவன் ஏரியின் நடுவில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் .
அவரைக் உடனடியாக அத்திமலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அத்திமலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
