
மட்டக்களப்பில் மின்கம்பத்துடன் மோதிய சொகுசு கார்
மட்டக்களப்பு தாளங்குடா பகுதியில் அதிசொகுசு கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொத்துவிலில் இருந்து அதிசொகுசு கார் சென்று கொண்டிருந்த போது தாளங்குடா பிரதான வீதியில் வைத்து இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 2.25 மணியளவில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
விபத்துக்குள்ளான காரில் மூன்று நபர்கள் வந்து கொண்டிருந்த வேளை சாரதியின் தூக்க கலக்கமே இவ்விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
வாகன சாரதி சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் தனியார் வைத்தியசாலையிலும் மற்றும் ஒரு நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
