
லசித் மாலிங்க தேடிய இளம் கிரிக்கெட் வீரரின் வீட்டிற்கு ரிஷாட் விஜயம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் முகநூல் காணொளியின் மூலம், நாடு முழுவதும் அறியப்பட்டு புகழ்பெற்ற அநுராதபுரம், ஹொரவபொத்தானை, பத்தாவ பிரதேசத்தின் இளம் கிரிக்கெட் வீரர் பைனாஸின் இல்லத்திற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கடந்த சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டதுடன், பைனாஸின் திறமையை பாராட்டி, வாழ்த்தி, ஒரு தொகை பணத்தையும் வழங்கி வைத்தார்.
அத்துடன், பைனாசின் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் மற்றும் கிரிக்கெட்டில் அவருக்குள்ள ஈடுபாடு, அதீத திறமை குறித்து கேட்டறிந்துகொண்ட தலைவர் ரிஷாட், அவரின் எதிர்கால முன்னேற்றத்துக்கு தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இதன்போது, இளம் வீரர் பைனாசின் பெற்றோர், உறவினர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர்மக்கள் என அனைவரும் அங்கு ஒன்றுகூடியிருந்ததுடன், தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான ஹைருதீன், நிஸ்தார் மற்றும் இல்ஹாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
