
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விவசாய அமைச்சினால் சிரதமானப் பணி
-யாழ் நிருபர்-
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னி ட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவின் ஏற்பாட்டில் இன்று சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ அவர்களின் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவரது ஆரம்ப உரையோடு முன்னெடுக்கப்பட்ட சிரதமானப் பணியில் வடக்கு மாகாண விவசாய அமைச்சு உத்தியோகத்தர்கள் பலாலி வீதியில் கோண்டாவில் சந்தி முதல் திருநெல்வேலி சந்தி வரையான பிரதேசத்தில் உக்காத கழிவுப் பொருட் களை அகற்றும் பணியினை மேற்கொண்டனர்.
குறித்த வேலைத்திட்டத்தில் நல்லூர் பிரதேச சபை கழிவகற்றல் வாகனவசதியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
