அவுஸ்திரேலியா அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஓமான் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதற்கமைய 165 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்